கர்நாடக தமிழர்களுக்காக வைகோ உண்ணாவிரதம்
சென்னை:கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் எதிரொலியாக கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யக் கோரி கர்நாடக அரசு, மத்தியஅரசு ஆகியவற்றை வலியுறுத்தி மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வைகோ தலைமையில் போராட்டம் நடக்கிறது. நிகழ்ச்சியில் வைகோபேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் பாதக அம்சங்களை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.
தமிழக மக்களை இந்தத் தீர்ப்பு ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்துமறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்து தமிழகத்தின் உரிமையை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார். கர்நாடகத்திற்குசாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையிலும் கூட, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இது கண்டனத்துக்குரியது.
1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது, இதேபோல தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தது. பல நூறு பேர்கொல்லப்பட்டனர். அதே நிலை இப்போதும் வந்து விடக் கூடாது என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications