கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா
விசாகப்பட்டனம்:இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டனத்தில் நடந்த 4வது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்தபோட்டியில் இலங்கை வென்றது. 3வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று விசாகப்பட்டனத்தில் 4வது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் போட்டியை ரசிகர்கள் விறுவிறுப்பாக எதிர்பார்த்தனர்.
மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. மழையால் 47 ஓவர்களாகக் கொண்டபோட்டியாக இது நடந்தது. முதலில் இலங்கை அணி பேட் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல்இலங்கை வீரர்கள் ரன் எடுக்கத் திணறினர்.
ஜெயசூர்யா (22), அட்டப்பட்டு (19), கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே (7), சங்கக்காரா (1) ஆகிய முன்னணிவீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ஆனால் மறு முனையில் புதுமுக வீரர் சமர சில்வா படு அபாரமாக ஆடிசதம்அடித்தார். 107 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.
இறுதியில் 47 ஓவர்களில் இலங்கை அணி 259 ரன்களை சேர்த்தது. பின்னர் இந்திய அணி தனது பேட்டிங்கைத்தொடங்கியது.
கங்குலியும், ஷேவாக்கும் பட்டாசு போல பொரிந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஷேவாக் சிறப்பாக ஆடி46 ரன்களை சேர்த்திருந்த நிலையில், ரன் அவுட் ஆனார்.
ராபின் உத்தப்பாவும் தன் பங்குக்கு அபாரமாக ஆடி 52 ரன்களைக் குவித்தார். ஆனால் இவர்களை விடகங்குலியும், யுவராஜ் சிங்கும்தான் இந்திய ரசிகர்களுக்கு ரன்களைக் குவித்து விருந்தளித்தனர்.
கங்குலி ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார். இதேபோல, யுவராஜ் சிங் படு சிறப்பாக ஆடி ரன்களைக்குவித்தார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அவர் விளையாடியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இறுதியில், 41 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 263 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.
ஆட்ட நாயகனாக சதம் அடித்த இலங்கை வீரர் சமர சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக கங்குலிஅறிவிக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications