அவதூறு வழக்கு: விஜயகாந்த்துக்கு விலக்கு
சென்னை:திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில், நேரில் ஆஜராவதிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் மாலைமுரசு நாளிதழுக்கு பேட்டிகொடுத்திருந்தார் விஜயகாந்த்.
இதையடுத்து முதல்வருக்கும், திமுகவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விஜயகாந்த் பேசியதாக கூறி அவர் மீதும் மாலைமுரசுநாளிதழ் மீதும் ஆற்காடு வீராசாமி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என விஜயகாந்த்துக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் விஜயகாந்த் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர அடிப்படை முகாந்திரம் கிடையாது. எனவேவழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கே.என். பாட்சா, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்தார். இருப்பினும்,நீதிமன்றம் கேட்டுக் கொண்டால் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கை தொடர அடிப்படை முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றம் கருதுகிறது. இதுதொடர்பான கருத்தை சம்பந்தப்பட்டவிசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications