செல் காதலை நம்பி சென்னைக்கு வந்த பெண்!
திருச்சி:செல்போன் மூலம் கிடைத்த காதலனை பார்க்க சென்னைக்கு வந்த மணப்பாறையைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் மீட்டு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஆஜர்படுத்தினர்.
மணப்பாறை சேதுரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். சலவைத் தொழிலாளியான இவரது மகள் மகாலட்சுமி (19). கடந்த 11ம் தேதி 3பேர் வந்து தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக மணப்பாறை போலீஸில் புகார் கொடுத்தார் செல்வம்.
ஆனால் போலீஸார் இந்த புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையைஅணுகிய செல்வம், ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தார்.
ஒரு வாரத்தில் மகாலட்சுமியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸார் வேகமாக மகாலட்சுமியைத் தேடத் தொடங்கினர். இந் நிலையில் செல்வத்தை மகாலட்சுமி போனில் தொடர்புகொண்டார். அப்போது, தான் சென்னைக்கு வந்துள்ளதாகவும், மோகன் மாமா வீட்டில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து சென்று மகாலட்சுமியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர், தன்னை யாரும்கடத்தவில்லை என்றார். பிறகு எப்படி சென்னைக்கு வந்தீர்கள் என்று போலீஸார் கேட்டேபாது அவர் கூறிய தகவல்:
சென்னையில் உள்ள மாமாவுடன் அடிக்கடி செல்போனில் பேசுவேன். அப்போது ஒருமுறை மாமாவிடம் வேலை செய்யும் மாயவரத்தைச் சேர்ந்தராஜேஷ் என்னுடன் பேசினார்.
அதன் பிறகு மாமாவுக்கு போன் செய்யும்போதெல்லாம் ராஜேஷ் என்னிடம் பேச ஆரம்பித்தார். எனக்கும் அவருடன் காதல் ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து அவர் தனியாக செல்போன் வாங்கினார். இருவரும் செல்போனில் பேசியே காதலை வளர்த்தோம். பிறகு என்னைக் கல்யாணம்செய்து கொள்ளுமாறு ராஜேஷிடம் சொன்னேன். அதை அவரும் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்தே நான் சென்னைக்குக் கிளம்பிச் சென்றேன். ஆனால் ராஜேஷை பார்க்க முடியவில்லை. எனது மாமாவின் கடையிலும் அவர் இல்லை.
இதையடுத்து ராஜேஷுக்கு நான் போன் செய்தபோது, பிப்ரவரியில் கல்யாண ஏற்பாட்டை செய்யலாம். அதுவரை சென்னையில் உள்ளஉறவினர்கள் வீட்டில் தங்கியிருக்குமாறும் கூறினார்.
இதையடுத்து நான் செந்தில் மாமா வீட்டுக்குப் போய் அங்கு தங்கியிருந்தேன். கிட்டத்தட்ட 40 நாட்களாகியும் என்னால் ராஜேஷை சந்திக்கமுடியவில்லை.
அப்போதுதான் எனது தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ள விவரம் எனக்கு மோகன் மாமா மூலம் தெரிய வந்தது. இதையடுத்தே நான் எனதுதந்தையிடம் பேசினேன் என்று கூறியுள்ளார் மகாலட்சுமி.
மகாலட்சுமியிடம் செல்போனில் பேசி காதலை வளர்த்து விட்டு விட்ட ராஜேஷ் எங்கே என்பது இதுவரை தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications