மதிமுக லோக்சபா கொறடாவை நீக்கிய எல்.ஜி!
டெல்லி:மதிமுக நாடாளுமன்றக் கட்சியின் கொறடா பொள்ளாச்சி கிருஷ்ணனை நீக்கி விட்டதாக எல்.ஜி. தலைமையிலன போட்டி மதிமுக அறிவித்துள்ளது.
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் போட்டி மதிமுகவை நடத்தி வருகின்றனர். போட்டி பொதுக்குழுவைக் கூட்டிவைகோவை பதவியிலிருநது நீக்கினர். செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாங்களே உண்மையான மதிமுக என்றும் அறிவித்தனர். பின்னர் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து தாங்களே உண்மையானமதிமுக என்று கூறி பல்வேறு ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று துணை தேர்தல் அதிகாரிபட்டாசார்யாவையும் சந்தித்து நாங்கள் தான் உண்மையான மதிமுக என்று மனு கொடுத்தனர். மேலும் நாடாளுமன்ற மதிமுக கொறடா பொள்ளாச்சிகிருஷ்ணனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிருஷ்ணன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தலைமையிலான மதிமுக சார்பாக கொறாடாவாக தேர்ந்துஎடுக்கப்பட்ட என்னை நீக்க எல்.ஜி. அணிக்கு அதிகாரம் இல்லை. மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி,நாடாளுமன்றம் நடைபெறும் போது புதன்கிழமை தோறும் நடைபெறும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி கொறாடக்களின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எனக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்றார்.
மதிமுகவை உடைக்க முயலும் எல்.ஜி. அணியினர் கிருஷ்ணனுக்கு பெருமளவில் பணம் கொடுத்து இழுகக முயன்றதாக வைகோவும், கிருஷ்ணனும்ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கே, காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அங்கீகாரம் அளித்துள்ளதாகதெரிகிறது. இது திமுகவை வெறுப்பில் தள்ளியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications