ஆம்னி பஸ்கள்-வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு
சென்னை:வெளி மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளின் நலனை முன்னிட்டு தனியார் பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 900 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவற்றில், 150பேருந்துகள் மட்டுமே கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால் அரசு விரைவுப் பேருந்துகளில் இடம்கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதனால் பயணிகளின் நலனை முன்னிட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, தனியார் சொகுசு பேருந்து உரிமையாளர்களிடம்பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 400 சொகுசு பேருந்துகள் தனியாரிடமிருந்து பெறப்படவுள்ளன.
இப் பேருந்துகளிலும் அரசு பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும். இதன் மூலம் தனியார் ஆம்னி பேருந்துகளால் ஏற்பட்டுள்ள போட்டியைஓரளவுக்கு சமாளிக்க முடியும் என அரசு கருதுகிறது.
இந்த காண்டிராக்ட் சொகுசு பேருந்தின் நடத்துநர் மட்டும் அரசு சார்பில் நியமிக்கப்படுவார். டிரைவரை தனியார் நிறுவனமே நியமிக்கும். நடத்துநர்பயணக் கட்டணத்தை தனக்குரிய டிப்போவில் ஒப்படைப்பார்.
மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம் தமிழகத்திலும் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications