இலங்கை தாக்குதல்: கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும்,எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தாக்குதல் தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் அமைதி காக்க மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுவருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதி காக்க மாட்டார்கள், அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்காது எனஎச்சரிக்க விரும்புகிறேன்.
இந்த மாதம் மட்டும் நான்கு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதி முறையிட்டுள்ளது.
தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்தால், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் செயலில் மட்டும் ஈடுபடமாட்டார்கள், வேறு செயல்களிலும் அவர்கள்ஈடுபட நேரிடும் என்று கடுமையாக கூறியுள்ளார் கருணாநிதி.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த லோக்சபா சபாநாயகர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுவது குறித்தகேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அப்படி காவிரி பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டால், முல்லைப் பெரியாறுபிரச்சினை குறித்தும் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழகம் மற்றும் கேரளத்திற்கு இடையே நிலவி வரும் இந்தப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதைக் கடைப்பிடிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்தும் லோக்சபாவில் விவாதிக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி குறித்தும், முல்லைப் பெரியாறு குறித்தும் இரு விதமான நிலை எடுக்கப்படாது என்றுநம்புகிறோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலுக்கு முதல் முறையாக முதல்வர் கருணாநிதி மிகக் கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் மெத்தனமாக இருக்கும் மத்திய அரசுக்கும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications