இந்தோனேசிய பூகம்பம்: 82 பேர் பலிசிங்கப்பூர், மலேசியாவும் நடுங்கின
சுமத்ரா:இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் ஏற்பட்டபூகம்பத்திற்கு குறைந்தது 82 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.3 ஆக இருந்தது. இதில் பலகட்டடங்கள், வீடுகள் இடிந்து விட்டன.
இடிபாடுகளில் சிக்கி 82 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. சுமத்ராதீவு படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாகக் காணப்படுகிறது.
இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவமும், காவல்துறையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள்படுகாயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
சுமத்ரா தீவில் பூகம்பம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பதாங் என்ற இடத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இப்பகுதியிலும் அதிக அளவில் சேதம்ஏற்பட்டுள்ளது.
பூகம்பம் குறித்து இந்தோனேசிய அமைச்சரவை செயலாளர் சுதி சிலாஹி கூறுகையில், பூகம்பத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளனர். மேற்குப்பகுதியில்தான் பெரும் பாதிப்பு ஏர்பட்டுள்ளது.
சோலாக் என்ற நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு ஒரு பள்ளிக் கட்டடம் முற்றிலும் இடிந்து தரை மட்டமானது. இதில் 2 குழந்தைகள்இறந்துள்ளன.
நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்து விட்டன. பல இடங்களில் சாலைகளிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும்நோயாளிகளின் வருகையால் நிரம்பி வழிகின்றன என்றார்.
பூகம்பத்தைத் தொடர்ந்து கட்டடங்களிலிருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பெண்களும்,குழந்தைகளும் கதறி அழுதபடி ஓடி வந்தனர்.
இதேபோல மலேசியா, சிங்கப்பூரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் பூகம்பம் ஏற்பட்ட அதே நேரத்தில் சிங்கப்பூர்,மலேசியாவிலும் பூகம்பம் ஏற்பட்டது.
மலேசியாவின் கடலோர நகரான ஜோஹார் என்ற இடத்தில்தான் நில நடுக்கத்தின் அதிர்வுகள் பலமாக இருந்தன. உயரமான கட்டடங்களில்இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
சிங்கப்பூரிலுள்ள உயரமான கட்டிடங்கள் ஆடியதாக அங்கிருந்து வெளியேறியவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரைச் சுற்றிலும் உள்ள தீவுகளிலும்நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதுகுறித்துசிங்கப்பூர் பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்புத் துறை அலுவலக கட்டிடத்திலும் நிலநடுக்கம்உணரப்பட்டதாக கூறினார்.
கட்டடங்கள் ஆடியதால் பலர் பீதியடைந்து மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிங்கப்பூர், மலேசியாவில் உயிரிழப்பு ஏதும்இருப்பதாக தகவல் இல்லை.
சிங்கப்பூரின் உயரமான கட்டடங்களான சென்டன்னியல் டவர், கேபிடல் சதுக்கம், கான்கோர்ஸ் உள்ளிட்டவற்றில் இருந்தவர்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டனர். பீச் சாலை, ராபின்சன் சாலை, ஷென்டன் வே உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் நன்றாக உணரப்பட்டது.
சிங்கப்பூர் முழுவதுமே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பெரும் பீதி நிலவியது. இந்தோனேசிய பூகம்பம் சக்தி வாய்ந்ததுஎன்பதால் நிலநடுக்க அதிர்வுகள் மேலும் தொடரக் கூடும் என்ற அச்சம் சிங்கப்பூர், மலேசியாவில் நிலவுகிறது.
சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் நிலநடுக்கம் காரணமாக ஆடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1 லட்சத்து 60ஆயிரம் பேர் இறந்தது நினைவிருக்கலாம். ஆசிய நாடுகளையும் இந்த சுனாமி அலை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications