படிக்க விடாத கணவர்: பெண் டாக்டர் புகார்
சென்னை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்தப் பிரச்சினையில் அதிமுகநேரடியாக தலையிட்டு போராட்டத்தில் குதிக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக நலனைக் காக்க என் ஆட்சியில் போராடியதன் விளைவாக இன்று இந்த அளவுக்காவது நீரினைப் பெற முடிந்தது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்திய பிறகே, வேண்டா வெறுப்பாக அந்தக் கூட்டம்கூட்டப்பட்டது. கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகத்தின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பதைவிளக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் வந்த வரைக்கும் போதும் என பிரச்சனையை முடித்துவிடலாம் என்றனர்.
இது தொடர்பாக அதிமுக தனது கருத்துகளை தமிழக அரசுக்கும், பத்திரிக்கைக்கும் புத்தக வடிவில் தந்தது. இறுதி தீர்ப்பிலுள்ள சாதக பாதகங்களைஎடுத்துச் சொன்ன பிறகு, அங்கு கூடியிருந்த சில கட்சிகளுடைய நிலைப்பாட்டை தெரிந்த பிறகு, தீர்ப்பு வந்த 15 நாட்களுக்கு பிறகு நடுவர்மன்றத்திடம் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்என தமிழக அரசு முடிவினை எடுத்தது.
இதற்கு பிறகு கடந்த மாதம் 21ம் தேதி தீர்ப்பினை அமல் செய்வது குறித்து தமிழகத்தினுடைய நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்ல வேண்டும்எனவும், நீரினைப் பெறுவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது எனவும்கேட்டு அறிக்கையினை வெளியிட்டேன். இதற்கும் சரியான பதில் இல்லை.
இப்பிரச்சனை, காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரிதும் விவாதிக்கப்படுவதால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ், காவிரிநடுவர் மன்றத் தீர்ப்பு அமல்படுத்துவதற்கு 1 வருடமாகும் என்று கூறியதை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து சில விளக்கங்களை கோரி மனு செய்திருப்பதாகவும், அந்த முயற்சியில் இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தமுடியாது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தது, தமிழக நலனிற்கு எதிரான செயல் என பேட்டிகொடுத்தார். மத்திய நீர் வளத்துறை அமைச்சர் மூலமாக இது சாத்தியப்படாது, இதற்கு சில வருடங்கள் ஆகலாம் என அறிக்கை வெளியிடச் செய்து,அதை ஏற்றுக் கொண்டு கருணாநிதி கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளை பாதுகாக்காமல் சும்மா இருக்க அதிமுகவால் முடியாது. இதுக்குறித்து நேரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய நிலையில்அதிமுக உள்ளது. என்ன நேரடி நடவடிக்கை எடுக்கும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications