ராமர் பாலத்தைக் காக்க பாஜக யாத்திரை
மதுரை:ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்கக் கோரி 3 பாதயாத்திரை மற்றும் ஒரு ரத யாத்திரையைமேற்கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.
மதுரையில் பாஜக தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை பாஜக எதிர்க்கவில்லை. ஆனால் ராமர்பாலம் என அழைக்கப்படும் ஆதாம் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ராமர் பாலத்தை சேதப்படுத்தாத வகையில் இந்தத் திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி 3 பாதயாத்திரைமற்றும் ஒரு ரத யாத்திரையை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
விளாத்திகுளத்திலிருந்து ஒரு பாத யாத்திரையும், தேவகோட்டையில் இருந்து 2வது பாதயாத்திரையும், மதுரையிலிருந்து 3வது யாத்திரையும்கிளம்பி ராமநாதபுரத்தில் 3 பாதயாத்திரைகளும் முடிவடையும்.
ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரை பிரமாண்டமான ரதயாத்திரை நடைபெறும். இந்த யாத்திரைகளுக்கான தேதிகள் மார்ச் 11ம் தேதிநடைபெறும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
தமிழகத்தின் தனுஷ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரை போடப்பட்ட புராண காலத்து பாலம்தான் ராமர் பாலம். இந்தப் பாலம்இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். கற்களால் அமைக்கப்பட்ட புராதண பாலம் இது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள்செய்யப்பட வேண்டிய நிலையில் இந்தப் பாலத்தை இடிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது, வருத்தத்திற்குரியது.
கர்நாடக முதல்வர் குமாரசாமி 2 நாட்கள் தமிழகத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். மிகவும் அமைதியாக, எந்தவிதப் பிரச்சினையும்இல்லாமல் அவரது பயணம் அமைந்துள்ளது. ஆனால் கர்நாடகத்தில் இதற்கு நேர் மாறான நிலை நிலவுகிறது.
தமிழ்ப் பட படப்பிடிப்புகளை அங்கு நடத்த முடியவில்லை, தமிழ்த் திரைப்படங்களை திரையிட முடியவில்லை, தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்டவாகனங்களை அங்கு ஓட்ட முடியவில்லை. தமிழகப் பயணத்தின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இதே நிலை கர்நாடகத்திலும் ஏற்படகுமாரசாமி முயற்சிக்க வேண்டும்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான்அதுகுறித்து விவாதிக்கப்படும் என்றார் இல.கணேசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications