பஸ் எரிப்பு வழக்கு: 26 குற்றவாளிகள் அப்பீல்
சென்னை:தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முனியப்பன் உள்பட 26 குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்டதண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
தர்மபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை வழிமறித்து அதிமுகவினர் பேருந்துக்கு தீவைத்ததில், அதில்இருந்த கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு முதலில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில்நடந்தது. பின்னர் இது சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
சேலம் நீதிமன்றத்தில், கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன், நெடு என்கிற நெடுஞ்செழியன்ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும் மற்ற 26 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. விசாரணைக் காலத்திலேயேசெல்லக்குட்டி என்பவர் இறந்து விட்டார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். இந்த நிலையில் 3 பேருக்கு விதிக்கப்பட்டதண்டனையை உறுதி செய்யக் கோரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி முனியப்பன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்துள்ளார். மற்ற இருவரும் இன்னும் மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
தற்போது 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரும் தங்களது தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
சேலம் நீதிமன்றத்தில் விசாரணை முறையாக நடக்கவில்லை. எனவே எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரைதண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அனைவரும் கோரியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications