கல்லூரி கூர்க்கா கொலை; ஆவணங்கள் தீவைப்பு
வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியில், அரசுக் கல்வியியல் கல்லூரி காவலாளியை அடித்துக் கொன்ற கும்பல், கல்லூரியில் இருந்த ஆவணங்களைகிழித்துப் போட்டு எரித்து விட்டுத் தப்பியது.
காட்பாடி அரசு கல்வியியல் கல்லூரியில் நேபாளத்தை சேர்ந்த மோதிலால் சர்மா (50) என்ற கூர்க்கா, காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்றுகாலை அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன் கல்லூரி முதல்வர் புருஷோத்தமன் விரைந்து வந்தார். கல்லூரி அலுவலகத்திற்குள் இருந்த பீரோக்கள்உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆவணங்கள் கிழித்து தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள்வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மர்ம கும்பல் கல்லூரி ஆவணங்களை திருடுவதற்கோ அல்லது எ>ப்பதற்கோ வந்திருக்கலாம். அதை தடுத்த காவலாளியை கொன்றிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
கூர்க்காவைக் கொன்ற கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications