9வது உலகக் கோப்பை கிரிக்கெட்:ஜமைக்காவில் நாளை தொடக்க விழா!
மாண்டிகோ பே (ஜமைக்கா):அகில உலக கிரிக்கெட் ரசிகர்களால் படு ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்மாபெரும் தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்திய நேரப்படி நாளை அதிகாலை ஜமைக்கா தீவில் உள்ள டிரவ்லானி ஸ்டேடியத்தில்நடைபெறுகிறது.
ஒரு கோப்பை. 12 அணிகள். ஒரே கனவு. வந்து விட்டது உலகக் கோப்பைக் கிரிக்கெட் திருவிழா. உலகெங்கும் உள்ள, குறிப்பாக தெற்காசியரசிகர்கள் படு விறுவிறுப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 13ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளில்தொடங்குகிறது.
அதற்கு முன்பாக தொடக்க விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஜமைக்காவின் மான்டிகோ பே நகரில் உள்ள டிரவ்லானி ஸ்டேடியத்தில்நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை இந்த தொடக்க விழா நடைபெறுகிறது.
தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைசிறப்பிக்கும் வகையில் அதன் பின்னணியில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடந்த 8 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழக்களை விட படு வித்தியாசமாகவும், மிகுந்த பொருட்செலவுடனும் இந்த தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் இரண்டே முக்கால் மணி நேரம் இந்த தொடக்க விழா கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. டிரினிடாட் டொபாகோ தீவின் மைக்கேல்மான்டனோ, ஜமைக்காவின் சீன் ரபால், பார்படோஸின் ஆலிசன் ஹிண்ட்ஸ், செயின்ட் வின்சென்ட் தீவின் கெவின் லைட் ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முக்கிய ஸ்டார் கலைஞர்கள்.
தென் ஆப்பிரிக்க ரெகே கலைஞர் லக்கி டியூப், அயர்லாந்து நாட்டின் தி டஃப்பி பிரதர்ஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்குவிருந்தளிக்க காத்துள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அதிகாரப்பூர்வ பாடலை ரூபி, ஷேக்கி, பயான் லியோன்ஸ் ஆகியோர் இணைந்து பாடவுள்ளனர்.
2000க்கும் மேற்பட்ட பாடகர்கள், நடனக் கலைஞர்கள், பிற கலைஞர்கள் சேர்ந்து தொடக்க விழாவை ஜோர்படுத்த தயாராகி வருகின்றனர்.
பாடல், இசை தவிர நடனத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கரீபிய கலாச்சாரப் பின்னணியில் அமைந்த நடனங்கள்,பார்வையாளர்களைக வெகுவாக கவரும்.
தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் மாபெரும் வீரர் சர் கர்பீல்டு சோபர்ஸ் கலந்து கொள்ளவுள்ளார்.அவரை வாழ்த்தியும், தற்போதைய கேப்டன் பிரையன் லாராவை பாராட்டியும் ஒரு பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய உலகக் கோப்பை போட்டிகளை அதிகபட்சம் 3 நாடுகள் வரை சேர்ந்து நடத்தியுள்ளன. ஆனால் இந்த உலகக் கோப்பைப் போட்டியை,மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள 10 நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன.
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய தொடக்க விழாவுக்குப் பின்னர் 13ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.
அணிகள் விவரம்:
ஏ பிரிவு: ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து.
பி பிரிவு: இந்தியா, இலங்கை, வங்கதேசம், பெர்முடா.
சி பிரிவு: நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா.
டி பிரிவு: பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து.
போட்டிகள் நடைபெறும் இடங்கள் (நாடுகள்):
செயின்ட் கீட்ஸ் அண்ட் நெவிஸ், டிரினிடாட்-டொபாகோ, செயின்ட் லூஸியா, ஜமைக்கா, ஆண்டிகுவா-பர்புடா, கயானா, கிரெனடா, பார்படாஸ்.
மார்ச் 13 முதல் 25ம் தேதி வரை சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. மார்ச் 27 முதல் சூப்பர் எட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் அரை இறுதிப் போட்டி ஏப்ரல் 24ம் தேதி ஜமைக்காவில் நடைபெறுகிறது. இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஏப்ரல் 25ம் தேதி செயின்ட்லூசியாவில் நடைபெறுகிறது. பார்படாஸில் ஏப்ரல் 28ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்றில் ஒரு நாடே கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.இறுப்பினும் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளையும் போட்டியிலிருந்து கழித்து விட முடியாது. நியூசிலாந்தும் வலுவாகவே உள்ளது.
16 நாடுகள் பங்கேற்றாலும் கூட மேற்கண்ட எட்டு நாடுகளுக்கிடையேதான் உண்மையான போட்டி நிலவுகிறது. இவர்களில் யார் கோப்பையைஉயர்த்திப் பிடிக்கப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்களிடையே பெரும் ஆவலும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications