செக்ஸ் ராகிங்: 5 சீனியர் மாணவர்கள் டிஸ்மிஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஜூனியர் மாணவர்களை தகாத உறவுக்கு அழைத்து ராகிங் செய்த 5 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை அருகே உள்ள சேலையூரில் பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த பிரசாத், சுகுமார், நோபல்ஆகியோர் பி.டெக் முதலாமாண்டு படித்து வருகின்றனர்.

அவர்களே பி.டெக் இறுதியாண்டு படிக்கும் செளகத், மனோஜ், பிரேம் சங்கர், ஜூட் பிரசன்னா, பாசில், அருண் வின்சென்ட் ஆகிய மாணவர்கள்சந்தித்தனர். இவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான்.

மாடம்பாக்கத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு ஜூனியர் மாணவர்களை அழைத்த அந்த ஐந்து பேரும் அங்கு குரூப் ஸடடி செய்யலாம் எனக்கூறியுள்ளனர்.

ஆனால் வீட்டுக்குக் கூட்டிச் சென்று ஜூனியர் மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வலியுறுத்தி சித்திரவதை செய்துள்ளனர். சீனியர்மாணவர்களிடமிருந்து நோபல் மட்டும் எப்படியோ தப்பினார்.

சேலையூர் காவல் நிலையம் விரைந்த அவர், நடந்தது குறித்து கூறி மற்ற இருவரையும் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து போலீஸ்படை மாடம்பாக்கம் விரைந்து மற்ற இருவரையும் மீட்டது.

ஜூனியர் மாணவர்களிடம் செக்ஸ் சித்திரவதை செய்து ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 5 பேரும் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் பல்கலைக்கழக துணைவேந்தர் காவல் நிலையம் விரைந்து வந்து சீனியர் மாணவர்களை காவல் நிலையத்திலிருந்து அழைத்துச்சென்றார்.

இதற்கிடையே, சீனியர் மாணவர்களின் செக்ஸ் ராகிங் தகவல் பரவியதும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.உடனடியாக ஐந்து பேரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களை முதலில் பல்கலைக்கழக நிர்வாகம் சமாதானப்படுத்திப் பார்த்தது. ஆனால் மாணவர்கள் பிரச்சினையை விடுவதாக இல்லை என்றுதெரிந்ததைத் தொடர்ந்து அந்த ஐந்து மாணவர்களும் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள்விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ஐந்து பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+