இலங்கையை எச்சரிக்க வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைஅரசை மிகக் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். அப்போது இரண்டு கோரிக்கை மனுக்களை அவரிடம்கொடுத்தார்.

அதில், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறார்கள். இதுதொடர் கதையாகி வருகிறது. ஆனால் இந்தியகடற்படையும், கடலோரக் காவல் படையும், தமிழக மீனவர்களைக் காக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றன.

இலங்கை படையோடு, இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையும் ரகசிய உறவு வைத்துள்ளார்களா என்பதை அறிய வேண்டும். இந்தக்கேள்வி இப்போது ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ராமேஸ்வரம் அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை வெறித்தனமாக தாக்கி சுட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட படகுகள்சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர சம்பவத்தில் கிறிஸ்டோபர் என்ற மீனவர் பலியாகியுள்ளார்.

இந்திய மீனவர்கள் கடலுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த இலங்கை அரசுக்கு இந்தியஅரசு உத்தரவிட வேண்டும். கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து காப்பாற்றஇந்திய கடற்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுவில் வைகோ கூறியிருந்தார்.

இன்னொரு மனுவில், இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் கொலை வெறித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதை உடனடியாக நிறுத்தஇலங்கை அரசை கடுமையாக இந்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களை பட்டினி போட்டு சாக வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஈவு இரக்கமற்ற வகையில், அப்பாவிஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர் என்று கூறியிருந்தார் வைகோ.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இலங்கைத் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும், அதற்குரிய நடவடிக்கைகளை இந்தியஅரசு எடுக்கும் என்றும் வைகோவிடம் உறுதியளித்தார்.

பின்னர் வெளியில் வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் பேசியபோது, விடுதலைப்ப புலிகளுக்கு உதவி செய்யும் அரசியல் கட்சிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி கூறியுள்ளார்.

எங்களது நிலை மிகத் தெளிவாக உள்ளது. ஈழப் பிரச்சினையில், ஈழத்தில் உள்ள விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம். அவர்கள்தான் அங்குள்ளதமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகிறார்கள். மொத்தத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் பக்கம்தான் உள்ளனர்.

ஈழத்தில் உள்ள தமிழர்களை, அவர்களது போராட்டத்தை, ஈழத்தில் உள்ள விடுதலைப்ப புலிகளின் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்துஆதரிக்கிறோம், ஆதரிப்போம்.

தமிழகத்தில், தமிழகத்திற்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்திய அரசுக்கு எதிராகவோ,தமிழகத்திற்கு விரோதமாகவோ நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்று கூறினார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+