கோவை, திருப்பூரில் 5 புலி ஆதரவாளர்கள் கைது
கோவை:சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இரும்புக் குண்டுகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் கோவை மற்றும் திருப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள், கண்ணிவெடிகள் தயாரிக்கப் பயன்படும் இரும்புக் குண்டுகள் ஆகியவற்றைகடத்துவது அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 16 பேர் விடுதலைப் புலிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புலிகளுக்கு இரும்புக் குண்டுகள் கடத்தப்படுவதையொட்டி தமிழகத்தில் உள்ள அலுமினியப் பட்டறைகளையும், அகதிகள்முகாம்களையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அலுமினியப் பட்டறைகளும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளன. இந்தப் பின்னணியில், திருப்பூர்அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை செளரிப்பாளையம், ராஜீவ் காந்தி நகருக்கு விரைந்த போலீஸார் அங்கு 4 பேரை கைதுசெய்தனர். இவர்களுக்கு தங்க இடம் கொடுத்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவரும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
ஐந்து பேரும் உடனடியாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால்அவர்களில் இருவர் ராமநாதபுரம், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம் எனத் தெரிகிறது. இன்னொரு நபர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் எனக்கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications