காவிரி: 2 கட்டமாக அதிமுக உண்ணாவிரதம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிடக் கோரி அதிமுக அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2 கட்டமாகநடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 18ம் தேதி சென்னைையில் உண்ணாவிரதம்இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், இறுதிதீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக சார்ப்பில் வரும் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில்உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
அதேபோல 21ம் தேதியன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
வள்ளுவர் கோட்டம் எதிரே நடக்கும் உண்ணாவிரதத்தில் ஜெயலலிதா பங்கேற்கிறார். முன்னதாக 18ம் தேதி மட்டும் உண்ணாவிரதம் நடைபெறும்என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications