திருப்பதியில் கஞ்சா வேட்டை: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:திருப்பதியில் ரூ. 3 லட்சம் பெறுமானமுள்ள கஞ்சாவை சிறப்புப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான சிறப்பு போதை தடுப்பு படையினர் திருமலை அடிவாரத்தில் உள்ள அலிபுரி சோதனை சாவடியில் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநில அரசுப் பேருந்தில் அவர்கள் சோதனை போட்டபோது, ஒரு சாக்குப் பையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாசிக்கியது.
இந்த கஞ்சாவை யார் கொண்டு வந்தது என்பது தெரியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications