பாஜக கவுன்சிலர் திமுகவுக்கு பாய்ச்சல்
சென்னை:சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவுக்குப் பாய்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அதிமுகவுக்கு நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே கிடைத்தனர். அதேபோல மதிமுகவுக்கு ஒரு கவுன்சிலர்கிடைத்தார்.
தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் 2 உறுப்பினர்களும், மதிமுக உறுப்பினரும், திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் 99 கவுன்சிலர்களின்தேர்தல் குறித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்ற முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியைச் சேர்ந்த 98 கவுன்சிலர்களையும் ராஜினாமாசெய்யக் கூறினார்.
அதன்படி 98 பேரும் ராஜினாமா செய்தனர். பின்னர் நடந்த மறு தேர்தலிலும் தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு கவுன்சிலர்கள் கிடைத்தனர்.தேமுதிக 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆனால் தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே தேமுதிக கவுன்சிலர் சர்தார் என்பவர் திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார். இந்த நிலையில்,பாஜகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரும் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
49வது வார்டிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்குமார் என்பவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில்இணைந்தார்.
இந்த இணைப்பின்போது கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்,மேயர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று திமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு பிற கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அடுத்தடுத்து திமுகவில் போய் இணைந்து வருவதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications