பஸ் எரிப்பு-25 அதிமுகவினரின் தண்டனை நிறுத்திவைப்பு!: நிபந்தனை ஜாமீனில் விடுதலை!!
சென்னை:தர்மபுரிபஸ் எரிப்பு வழக்கில் 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 25 பேரின் தண்டனையையும் நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த 25 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி இருக்கவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
ஊழல் வழக்கில் மாஜி முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும்அதிமுகவினர் வெறியாட்டம் போட்டனர்.
தர்மபுரியில் கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்தை மறித்து அதிமுகவினர் தீவைத்து எரித்தனர். இதில்கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் ப>தாபமாக கருகி இறந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி 3 பேருக்குத் தூக்குத்தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் வழங்கக் கோரியும் 25 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.பாலசுப்ரமணியம், பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, 25 பேருக்கும் ஜாமீன் அளிக்கக் கூடாது எனஎதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 25 பேர் மீதான தண்டனையைநிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.
25 பேரும் தலா ரூ. 25 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும்.மறு உத்தரவு வரும் வரை சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும்கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் நிபந்தைனை விதித்து உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications