10 மாதம்-8 நிறுவனங்கள்-ரூ.7000 கோடி!!
சென்னை:திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பத்து மாதங்களில் ரூ. 7,000 கோடி முதலீட்டைக் கொண்ட, உலகின் மிகப் பெரிய 8 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் வளர்ச்சிக்கான சிறப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில்நடந்தது.
இக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் இந்த காலக் கட்டம் ஒரு பொற்காலமாகும். உலகெங்கிலும் உள்ளபெருந்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவதற்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் அரசின் ஆர்வமிக்கநடவடிக்கைகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.
தமிழக அரசின் முற்போக்குக் கொள்கையின் காரணமாக, இந்த அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களுக்குள் 8 பெரிய நிறுவனங்களோடு புதியதொழிற்சாலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகளில் ரூ.7,000 கோடி முதலீடு செய்யப்படுவதோடு, 37,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 60,000 பேருக்கு மறைமுகவேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
மேலும் பல புதிய தொழில் .தலீடுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளன. இந்த முதலீடுகளால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும்.இதை வளரச்சியை உறுதிப் படுத்தவும் விரைவுபடுத்தவும் அரசோடு இணைந்து தொழில் முதலீட்டாளர்களும் செயல்பட வேண்டும்.
இதைப்பற்றிய உங்கள் கருத்துகளை கேட்டு அரசு துரித நடவடிக்கை எடுக்கும். இதற்காக தொழில் பகுதிகளில் மின்சாரம், சாலைகள், தண்ணீர்போன்ற வசதிகளை மேம்படுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்துகிறது. இதை மேலும் சிறப்பாக செய்ய உங்கள் ஆழ்ந்த கருத்துகளை வழங்கவேண்டும்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றுமதி அதிகரித்து, உள்நாட்டுப் பொருட்களில் உற்பத்திச் செலவுகள் குறைந்து, மேலும் பலபுதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்.
இதேபோல், ரயில் போக்குவரத்து வசதிகள், விமான தள மேம்பாடு, துறைமுகங்களின் விரிவாக்கம் ஆகியவை இந்த தொழில்துறையைஆற்றல்படுத்தும் என்பதால் இதைப்பற்றி மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக தேவையான எண்ணிக்கையில் தொழில்சாலைகளில் பணியாற்ற தகுதி படைத்தசெயல்திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க, அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் அந்தந்தபகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் கூட்டு முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.
இதனால் மாணவர்கள் தொழிற்சாலைளில் உடனே பணியில் அமர தகுதியடைவர். தமிழக அரசு ஒவ்வொரு தொழில்துறையிலும் உள்ள பல்வேறுபிரச்சனைகளை கண்டறிந்து தீர்வு கண்டு வருகிறது என்றார் கருணாநிதி.


Click it and Unblock the Notifications
