வீடு புகுந்து பெண் கற்பழிப்பு-கொலை, கொள்ளை
திருநெல்வேலி:இரட்டைக் கொலை நடந்த பதட்டமே இன்னும் தணியாத நிலையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த மர்ம நபர் அவரைக் கொலைசெய்து நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது நெல்லையில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதான் குமார், கண்ணன் என இருவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதட்டமே இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கற்பழித்து, கொலை செய்து, நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கரியமாணிக்கம் பெருமாள் கோவில் அருகே உள்ள சிவா தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். தனது மனைவி மீனாட்சி (27), இரண்டுகுழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
நடராஜன் மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல வேலைக்குப் போய் விட்டார். வீட்டில் மீனாட்சி தனது ஒருவயது மகளுடன் வீட்டில் தனியாக இருந்தார்.
பிற்பகல் 12 மணியளவில் வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். பின்னர் மீனாட்சியை மிரட்டி பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். அதன் பின்னர்அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, மீனாட்சியின் தங்கத் தாலி மற்றும் தோடு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார்.
மாலை நாலரை மணியளவில் மீனாட்சியின் மகள் அழுத சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டின்நடு அறையில் நிர்வாண நிலையில் மீனாட்சியின் பிணம் கிடந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications