ஏழைகளுக்கு கருணாநிதி உதவிக்கரம்!
சென்னை:கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 43 ஏழைகளுக்கு ரூ. 2,20,000 மதிப்புள்ள மருத்துவ மற்றும் கல்வி உதவித் தொகையை முதல்வர்கருணாநிதி வழங்கினார்.
இதுகுறித்து திமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ. 5 கோடி நிதி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்துஏழை, எளியவர்களுக்கு மருத்துவ, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று 43 பேருக்கு ரூ. 2,20,000 நிதியுதவி வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி இந்த உதவியை வழங்கினார்.
இதற்கு முன்பு 2005ம் ஆண்டு நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் ரூ. 39 லட்சத்து 25 ஆயிரம் அளவுக்கு மருத்துவம் மற்றும்கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி 10ம் தேதி சென்னையில் தொடங்கிய 30வது புத்தகக் கண்காட்சிக்கு இந்த நிதியிலிருந்து ரூ. 1 கோடியை கருணாநிதிநன்கொடையாக வழங்கினார்.
மீதமுள்ள ரூ.4 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து தொடர்ந்து ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications