தவறான ஊசி போட்ட டாக்டர்: வாலிபர் பலி
வேலூர்:வேலை வாங்கித் தருவதாக கூறி ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை வேலூருக்கு அழைத்து வந்துஏராளமான பணத்தை மோசடி செய்து விட்டு அவர்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது போடப்படும் கேட்டமைன் ஊசியைப் போட்டு விட்டுத்தப்ப முயன்ற டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் காந்தி சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த சுனில் குமார் (25), அமித்தம்பா (26), நீக் கமல்(27), அகில் கார்வார்கர் (29), பாதுராம் (34) ஆகியோர் தங்கியிருந்தனர்.
![]() |
இவர்களது பக்கத்து அறையில் அமிர்தாம்பா என்ற டாக்டர் தங்கியிருந்தார். இரவில் தூக்கம் வராமல் நான்கு பேரும் அவதிப்பட்டுள்ளனர்.இதையடுத்து அமிர்தாம்பாவிடம் சென்று தூக்கம் வரவில்லை, ஏதாவது மருந்து கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அந்த நான்கு பேருக்கும் ஒரு ஊசியைப் போட்டுள்ளார் டாக்டர். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே நான்கு பேரும் ஆழ்ந்த மயக்க நிலைக்குப்போய் விட்டனர்.
மறுநாள் காலையில் இவர்களின் அறை கதவு வெகு நேரமாக திறக்கமால் இருந்ததால் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகம் அடைந்து அறைக் கதவைதிறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே அவர்கள் நால்வரும் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்த லாட்ஜ் உரிமையாளர் போலீசுக்கு தகவல்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது, டாக்டர் அமிர்தாம்பா அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் கேட்டமைன்ஊசியைப் போட்டது தெரிய வந்தது.
ஊசியைப் போட்டுக் கொண்ட பாதுராம் பரிதாபாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸாரிடம் அமிர்தாம்பா கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்:
4 பேரையும் வேலை வாங்கி தருவதாக கூறி அமிர்தாம்பா வேலூர் அழைத்து வந்துள்ளார். இதற்காக லட்சகணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
வேலையில் சேர வேண்டுமானால், உடல் தகுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று கூறி சிஎம்சி மருத்துவமனையில் ரத்தம் மற்றும் சிறுநீர்சேகரித்தார். ஆனால் அவற்றை எந்த பரிசோதனை நிலையத்திற்கும் அவர் அனுப்பவில்லை.
நான்கு பேரையும் மோசடி செய்து விட்டு, அப்படியே வேலூரிலேயே விட்டு விட்டு தப்பிக்க அவர் திட்டம் போட்டார். இதற்காக தனக்கு மட்டும்டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு நான்கு பேரையும் அழைத்த அவர், உடல் பலவீனமாக உள்ளதால் உங்கள் நான்கு பேருக்கும் ஒரு ஊசி போடுகிறேன், படுத்துத்தூங்குங்கள் சரியாகி விடும் என்று கூறி கேட்டமைன் ஊசியைப் போட்டுள்ளார்.
பின்னர் அவரும் கேட்டமைன் மருந்தை சிகரெட்டில் வைத்து புகைத்துள்ளார். இதில் அத்தனை பேரும் மயங்கி விட்டனர்.
கேட்டமைன் என்ற மருந்து, அறுவைச் சிகிச்சையின்போது மயக்கம் வர வைப்பதற்காக போடப்படும் மருந்தாகும். இதை போதைப் பொருளாகவும்சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த மருந்து அளவுக்கு அதிகமாக செலுத்தப்பட்டால் நரம்பு மண்டலம் பாதித்து, மூச்சடைப்பு ஏற்படும், உயிரிழப்புஏற்படும்.
அமிர்தாம்பா கொடுத்த மருந்து அளவுக்கு அதிகமாகப் போனதால்தான் பாதுராம் உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.அமிர்தாம்பாவை கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications