முதல் போட்டியில் மே.இ. தீவுகள் வெற்றி
கிங்ஸ்டன்:உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திவெற்றிக் கணக்கை ஆரம்பித்தது.
9வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ளசபீனா பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், பாகிஸ்தானும் முதல் போட்டியில் சந்தித்தன.
உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், முன்னணிப் பந்துவீச்சாளர்கள் இல்லாத பலவீன நிலையில்பாகிஸ்தானும் களம் இறங்கின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், மேற்கு இந்தியத் தீவுகளை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள்பேட்டிங்கைத் தொடங்கியது.
கிறிஸ் கெய்லும், சந்தர்பாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் இருவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். உமர் கல் பந்தில் கெய்லும், இப்திகார் பந்தில் சந்தர்பாலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அடுத்து வந்த ராம் நரேஷ் சர்வானும், சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள மர்லான் சாமுவேல்ஸும் அட்டகாசமாக ஆடினர். குறிப்பாகசாமுவேல்ஸ் ஆட்டத்தில் அணல் பறந்தது. சிறப்பாக ஆடிய சாமுவேல்ஸ், 63 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்த உலகக் கோப்பைப் போட்டியில்முதல் அரை சதம் அடித்த பெருமை அவருக்குக் கிடைத்தது.
மறு முனையில் சர்வான் சிறப்பாக ஆடி 49 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்த கேப்டன் லாரா அடித்துப் பிரித்து விடுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 37 ரன்களுடன் தனது இன்னிங்ஸை சுருக்கிக் கொண்டார் லாரா.
கடைசி வரிசையில் இறங்கிய டிவைன் ஸ்மித், ரசிகர்களுக்குப் பெரும் விருந்தளித்தார். 15 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் அதிரடியாக ஆடி 32ரன்களைக் குவித்து மேற்கு இந்திய அணிகளின் ஸ்கோர் கிடுகிடுவென உயர வழி வகுத்தார்.
இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
பின்னர் களம் இறங்கியது பாகிஸ்தான். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அபார பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிக்கித் திணறினர் பாகிஸ்தான்வீரர்கள்.
டிவைன் ஸ்மித்தும், பிரேவோவும் அபாரமாக பந்து வீசி ஆளுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகஅமைந்தார்கள். இருப்பினும் டேரன் பாவல் வீழ்த்திய இரு விக்கெட்டுகள்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியாகஅமைந்தது.
இம்ரான் நசீர் மற்றும் முகம்மது ஹபீஸ் ஆகிய இரு ஓப்பனர்களையும் பாவல் தனது அபார பந்துவீச்சால் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையவைத்தார்.
அதிரடி வீரர் முகம்மது யூசுப் 37 ரனிகளில் ஸ்மித் பந்தில் வீழ்ந்தார். கேப்டன் இன்சமாம் 36 ரன்களை சேர்த்தார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில்வீழ்ந்த நிலையில் சோயிப் மாலிக் மட்டும் நிதானமாக ஆடி 62 ரன்களை குவித்தார்.
தட்டுத் தடுமாறி விளையாடிய பாகிஸ்தான் அணி இறுதியில் 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்களில் சுருண்டது.இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது.
இன்றைய போட்டி:
குரூப் ஏ: ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து (செயின்ட் கீட்ஸ்-நெவிஸ்)
குரூப் சி: கென்யா - கனடா (செயின்ட் லூஸியா)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications