பள்ளி பீரோ தலையில் விழுந்து மாணவி பலி
திருச்செந்தூர்:தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழைய காயல் பகுதியில் பள்ளியில் இருந்த பீரோ தலையில் விழுந்ததில் 14 வயது மாணவிபரிதாபமாக பலியானார்.
பழைய காயல் அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் திவ்யா (14). பழையகாயல் புனித மரியன்னை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளிக்குச் சென்ற திவ்யா மாலையில் வகுப்பு முடிந்ததும், வகுபபறையில் இருந்த பீரோ அருகே வைக்கப்பட்டிருந்த தனது பையைஎடுத்துள்ளார். அப்போது திடீரென அந்த பீரோ அப்படியே திவ்யா மீது சரிந்தது.
இதில் திவ்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே திவ்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை சிஸ்டர் ஆரோக்கிய மேரி கூறுகையில், அந்த பீரோவில் புதிய புத்தகங்களை வைக்கத்திட்டமிட்டிருந்தோம். திவ்யா தனது புத்தகப் பையை எடுக்க முயன்றபோது பீரோ அவர் மீது சாய்ந்துள்ளது.
நிலை தடுமாறி கீழே விழுந்த திவ்யாவின் தலையில் பலத்த அடிபட்டது. மேலும் அவரது தலை வகுப்பறையில் இருந்த மேசையில் பின்புறமாகமோதியதால்தான் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications