பணத்தகராறில் இருவர் கடத்திப் படுகொலை
சென்னை:சென்னையில் பணத் தகராறில் இரு இளைஞர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள ஏரி ஒன்றின் கரையில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. அதேபகுதியில் உள்ள கோவில் குளத்தில் இன்னொரு வாலிபரின் பிணமும் கிடந்தது.
இதையடுத்து போலீஸார் இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்களது பெயர் விஸ்வநாதன் (21), அனூப் (22)எனத் தெரிய வந்தது. விஸ்வநாதன் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர். அனூப்பும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான்.
அனூப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன் (53). கேரளாவைச் சேர்ந்தவர். இவருக்கு அனுப் தவிர அபிலாஷ் (17) என்ற இன்னொரு மகனும் உள்ளார்.உன்னிகிருஷ்ணன் தி.நகரில் ஹோட்டல் வைத்துள்ளார்.
அனூப்பும், விஸ்வநாதனும் சேர்ந்து பழைய செல்போன்களை வாங்கி விற்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். 12ம் தேதி காலை முதலேஇருவரையும் காணவில்லை.
இவர்களுக்கும் இஸ்மாயில் என்பவருக்கும் இடையே செல்போன்களை வாங்கி விற்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவரும்கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சம்பவத்தன்று அனூப்புக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் உடனே தி.நகர் சத்யா மார்க்கெட்டுக்கு வரும்படி கூறினார்.இதனால் வெளியே சென்று வருவதாக தன் தந்தையிடம் கூறி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
பின்னர் பகல் 12 மணிக்கு தன் தந்தைக்கு செல்போனில் பேசிய அனூப், தி.நகரிலிருந்து என்னை 2 பேர் கடத்திச் செல்கிறார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த உன்னிகிருஷ்ணன், தன் மகனை சிலர் கடத்துவதாக மாம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு போனில் பேசிய அனூப் பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளதாக கூறியதையடுத்து, அங்குமாறுவேடத்தில் சென்ற போலீஸாருக்கு அனூப் இங்கு வரவில்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில்தான் அனூப், விஸ்வநாதன் பிணங்கள் கிடைத்தன. நேற்று இரவு இருவரையும் கடத்தப் பயன்பட்ட காரை போலீஸார் பறிமுதல்செய்தனர்.
இந்தக் இரட்டைக் கொலை தொடர்பாக இஸ்மாயில் மற்றும் ஆனந்த் ஆகியோரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications