உச்சநீதிமன்றத்தில் கதறி அழுத ஏ.ஆர்.லட்சுமணன்!
டெல்லி:உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்தஏ.ஆர்.லட்சுமணனுக்கு மிகவும் அநாகரீகமான வகையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்த லட்சுமணன்,கண்ணீர் விட்டுக் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் ரூ. 5,00 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக புகார்எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் சிங் தாக்கல் செய்த மனுவையும்உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், முலாயம் சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரானதமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் இன்று நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
தனக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. எனது நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான மிரட்டலை நான்சந்தித்ததில்லை என்று கூறிய லட்சுமணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட லட்சுமணன், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதியிடம்தெரிவித்து விட்டேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.
இன்னும் ஐந்து நாளில் லட்சுமணன் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ்தரப்பிலிருந்து லட்சுமணனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி அவர் நீதிமன்றத்தில் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு என்ன மாதிரியான மிரட்டல் வந்தது என்பதைத் தெரிவிக்க லட்சுமணன் மறுத்து விட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications