மக்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்-ஜெ
சென்னை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் நாளுக்கு ஒரு கருத்தை கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் இன்று வரை பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் கருணாநிதி. ஆனால் ஒன்றில்மட்டும் அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அது என்னவென்றால், மத்திய அரசை வற்புறுத்தி அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது.அதற்கு அவர் தயாராக இல்லை.
காவிரி பாசன விவசாயிகளுக்கு வருகிற ஜூன் மாதத்திலிருந்து காவிரி தண்ணீர் கிடைப்பதற்கு இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லைகருணாநிதி.
கடந்த 7ம் தேதி அன்று நான் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி தரப்பு வழக்கறிஞர்களுடைய சட்டக் கருத்துக்களை எங்கள் கட்சி தலைமைஅலுவகத்திற்கு அனுப்பி, அவர்களை இது குறித்து என் தரப்பில் நியமிக்கப்படும் வழக்கறிர்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் முன்விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
ஆனால் அதற்கு பதிலாக கருணாநிதி இரண்டு வழக்கறிஞர்களின் கருத்துகளை அனுப்பி வைத்து அவர்களே சொல்லி விட்டார்கள், ஆகையால் இதுமுடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவைகளை படித்து பார்த்த போது அவை எந்த அளவுக்கு தவறான சட்ட கருத்துகள் என தெரியவருகிறது. பன் மாநில நதி நீர் தாவா சட்டம் 1956பிரிவு 5(2)ன் கீழ் எப்போது ஒரு தீர்ப்பு வருகிறதோ அதிலிருந்து 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலங்களோ, மத்திய அரசோ விளக்கங்களோஅல்லது வழிகாட்டுதலோ மட்டும் கேட்டு பிரிவு 5(3)ன் கீழ் மனு செய்து கொள்ளலாம்.
ஆனால் காவிரி தீர்ப்பு வந்து 45 நாட்களாகியும் இதுவரை எந்த மாநிலமும் எவ்வித மனுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை. கருணாநிதிதெரிவித்த இரண்டு வழக்கறிஞர்களுடைய கருத்துகளை நான் பல வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அவர்கள் சொல்லும் முக்கியமானவிஷயம் அந்த இரண்டு வழக்கறிஞர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பது தான்.
தமிழகத்திற்கு துரோகம் செய்வதற்கு ஏற்ப இரண்டு வழக்கறிஞர்களின் கருத்துகளை தேடிப் பிடித்துள்ளார் கருணாநிதி.
கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் அவர் எடுக்கின்ற நிலைப்பாடு முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும்,அவர் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தான் தெரிவிப்பார்.
தமிழக மக்களுக்காக போராட வேண்டிய முதல்வர், தமிழக மக்களுக்கு விரோதமாக கங்கணம் கட்டிக் கொண்டு பணியாற்றிகிறார் என்பதைபார்க்கும் போது தமிழக மக்கள் இந்திய அளவில் இவரால் அவமானப்படுகிறார்கள்.
கருணாநிதி அமைத்த வழக்கறிஞர்களுடன் நான் நியமிக்கும் வழக்கறிஞர்கள் காவிரி தீர்ப்பு குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன்.அதற்கு ஏற்பாடு செய்யாமல் சட்டமன்றத்தில் விவாதிக்க வாருங்கள் என்று ஏன் என்னைக் கூப்பிடுகிறார்.
வினோதமான சட்டப்பேரவைத் தலைவர் இருக்கும் சட்டமன்றத்தில் என்னையும் பேச விடமாட்டார், எனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும்பேச விடமாட்டார். ஏதாவது பேச எழுந்தால் உட்காரு என்று சொல்லும் ஒரு பேரவைத் தலைவர். உண்மை நிலையை சொன்னால் அவை அனைத்தும்அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது என்று அறிவிப்பார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடாமல் தன் கண் அசைவிலேயே அதிகாரிகளை விட்டு மைக்கை ஆஃப் செய்ய சொல்வார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டால் அது முடியாதுஎன்று கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்.
கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் இருந்தால் சட்ட விளக்கம் ஒரு விதமாக இருக்கும், ஆட்சியில் இருந்தால் அதே சட்டத்தின் விளக்கம் எதிர்மாறாகஇருக்கும். கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன். ஆட்சியில் இல்லாத போது ஒரு தீர்மானத்தை கருணாநிதியில் திமுக பொதுக் குழுவில் போட்டார்களே,அது சரியா அல்லது இப்போது தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்களே இது சரியா?இதற்கு வழக்கம் போல் சுற்றி வளைத்து கவிதை எழுதாம்ல, நேரடிப் பதிலை கருணாநிதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications