ஆயுதக் கடத்தல்-முக்கியக் குற்றவாளி ராக்கு கைது
ராமேஸ்வரம்:தமிழகத்திலிருந்து ராக்கெட் லாஞ்சர் தயாரிப்பு கருவியை இலங்கைக்குக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியானராக்கு என்பவரை ராமேஸ்வரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தோப்பு வலசை என்ற கிராமத்தில் சமீபத்தில் சிலர் இலங்கைக்கு முக்கியப் பொருள் ஒன்றைக் கடத்தமுயல்வதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் படகில்கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர் தயாரிப்புக் கருவியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி கண்ணன் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ராக்கு என்பவர்தான்இந்தக் கடத்தலுக்கு முக்கியப் புள்ளி என்றும் இக்கடத்தலில் 5 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது.
இதையடுத்து ராக்கு, முனியாண்டி, முனியசாமி, சிவபாலன் ஆகியோரைப் போலீஸார் தேடி வந்தனர். இதில் முனியாண்டி (இவரது படகுதான்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்தது), முனியசாமி, சிவபாலன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ராக்கு தொடர்ந்து தலைமறைவாகஇருந்து வந்தார்.
இந்த நிலையில் ராக்குவை போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் சென்னைக்குக் கொண்டு சென்றபோலீஸார் அங்கு வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications