ரிலையன்ஸ் கடைகளுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:ரிலையன்ஸ் மொத்தக் கடைகளை மூடக் கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடுவதை கண்டித்தும், ரிலையன்ஸ் கடைகளை மூடக்கோரியும் ராமதாஸ் தலைமையில்பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ரிலையன்ஸ் கடை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சில்லரை வணிகத்தில் ஈடுபடும் ரிலையன்ஸ் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும், ரிலையன்ஸ்க்கு கொள்ளை லாபம், சில்லரை வியாபாரிகளுக்கு பட்டை நாமம் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.
சில்லரை வியாபாரிகள் நசுக்கப்படுவதை சித்தரிக்கும் வகையிலான பேனர்களை ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிறுவனத்தால்ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.
இந்த துண்டுப் பிரசுரங்களை கடை, கடையாக ஏறி ராமதாஸ் வியாபாரிகளிடம் கொடுத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வணிகத்தின் ஈடுபடுவதால் தமிழ்நாட்டில் 50 லட்சம் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம். இப்போது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் விரைவில் சில்லறைவணிகத்துக்கு வர இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.6,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோருக்குவேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் லட்சணக்கானோருக்கு வேலை பறிபோய் உள்ளது. இதை அனுமதிக்க முடியாது. ஆன்லைன் வர்த்தகத்தைதடை செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் ரிலையன்ஸ் விஷயத்தில் வாய் திறக்காதது ஏன்?
இந் நிறுவனம் கடைகளை மூடிவிட்டு ஓட வேண்டும். இல்லாவிட்டால் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவேன். எல்லா ரிலையன்ஸ் கடைகள் முன்பும்நின்று கொண்டு, வாடிக்கையாளர்களிடம் அந்த கடைகளுக்கு செல்லாதீர்கள் என்று வேண்டுகோள் விடுப்போம். இந்த பிரச்சனையைசட்டமன்றத்திலும் எழுப்புவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications