வீழ்த்தியது இலங்கை - சிதறியது இந்தியக் கனவு!

Subscribe to Oneindia Tamil

போர்ட் ஆப் ஸ்பெயின்:மிக முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் படு மோசமாக ஆடி இலங்கையிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, உலகக் கோப்பைப்போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா.

இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பைப் போட்டி ஆரம்பத்திலிருந்தே சரிப்பட்டு வரவில்லை. முதல் போட்டியில் முட்டாள்தனமாகவங்கதேசத்திடம் தோல்வியுற்றது. இந்திய வீரர்கள் விளையாடிய விதத்தைப் பார்த்து கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் கொந்தளித்துப்போயினர்.

பின்னர் பெர்முடாவுடனான போட்டியில் நமது வீரர்கள் வீராவேசமாக ஆடினர். ஆனால் முக்கியமான போட்டியே நேற்றுதான் நடந்தது.இலங்கையுடனான இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் சூப்பர் 8 சுற்றுக்கே முன்னேற முடியும் என்பதால் இந்தப் போட்டியில் இந்தியாவெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் இந்திய வீரர்கள் நேற்று விளையாடிய விதத்தைப் பார்த்தால், அந்த முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்தது போலவே தெரியவில்லை.பந்துவீச்சில் ஓரளவுக்கு சிறப்பாக செய்த இந்தியா, பேட்டிங்கில் வழக்கம் போல சொதப்பி விட்டனர்.

100 கோடி இந்தியர்களின் கோப்பைக் கனவை சுக்கு நூறாக சிதறடிக்கும் வகையில் இந்தியாவின் பேட்டிங் இருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில்இந்தியா இப்படிக் கேவலமாக வெளியேறுவது இது 2வது முறையாகும்.

1979ம் ஆண்டு முதல் சுற்றிலேயே இந்தியா தோல்வியுற்று வெளியேறியது. அதன் பிறகு 1983ல் கோப்பையை வென்றபோதும் சரி, அதற்குப் பிறகுவந்த உலகக் காப்பைப் போட்டிகளின்போதும் சரி, கெளரவமான முறையில்தான் இந்தியா விளையாடியுள்ளது, வெளியேறியுள்ளது.

ஆனால் இந்த முறை ஒரே ஒரு வெற்றியுடன் இந்தியா நாடு திரும்புகிறது. இன்னும் கூட இந்தியாவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.ஆனால் அதற்கு வங்கதேசத்தை குட்டி அணியான பெர்முடா தோற்கடிக்க வேண்டும். நடக்கும் கதையா அது?

வழக்கமாக சிறப்பாக ஆடி வந்த கங்குலி நேற்று கை விட்டு விட்டார். வழக்கம் போல சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடாமல் டக் அவுட் ஆகிஇந்தியர்களை வெறுப்படித்தார். அப்படி அடிப்பார், இப்படி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட, ஊதி விடப்பட்டே வளர்ந்தவரான டோணிமுட்டையுடன் பெவிலியன் திரும்பினார்.

இப்படி முன்னணி வீரர்கள் கைவிடவே, 255 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் தொட முடியாமல் முடங்கிப் போனது இந்தியா. கேப்டன் டிராவிட்சிறப்பாக ஆடி சேர்த்த 60 ரன்களும், ஷேவாக் 46 பந்துகளில் சேர்த்த 48 ரன்களும் இந்தியாவுக்கு உதவத் தவறி விட்டன.

தேவையில்லாமல் சிக்சருக்குத் தூக்கப் போய் முரளிதரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கங்குலி. அவர் எடுத்தது வெறும் 7 ரன்கள்தான்.கங்குலியை அதிகம் குறை சொல்ல முடியாது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய அவர் திரும்பியது முதலே சிறப்பாகத்தான்விளையாடி வருகிறார். நேற்று தவறி விட்டார்.

ஆனால் சச்சின், டோணி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு என்னவாயிற்று? மாஸ்டர் பிளாஸ்டர் என்ற பெயருக்கேற்ப சச்சின் விளையாடியிருக்கவேண்டாமா?. ஒரு நாள் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்படும் யுவராஜ் இப்படித்தான் விளையாடுவதா? முடியை மட்டும்வளர்த்தால் போதும் என்று நினைத்து விட்டாரா டோணி?

நேற்றைய போட்டியில் தனி மனிதனாக போராடிப் பார்த்தார் டிராவிட். ஆனால் மறு முனையில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்ததால்அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்திய வீரர்கள் சற்றும் போராடாமல் அப்படியே இலங்கையிடம் சரண்டர் ஆனதைப் பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.இந்திய பேட்டிங் வரிசையை சீர்குலைத்த புண்ணியம் முரளிதரனுக்குத்தான். சிறப்பாக பந்து வீசிய முரளி, 41 ரன்களைக் கொடுத்து 3விக்கெட்டுகளைக் கலைத்தார். கங்குலியை கேட்ச் செய்து வெளியேற்றியதும் இவரே. வாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

இப்படி தடுமாற்றத்தோடு விளையாடிய இந்தியா இறுதியில், 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களுடன் கதையைமுடித்துக் கொண்டது.

முன்னதாக, இலங்கை அணியின் ரன் குவிப்பை ஜாகிர்கானும், அஜீத் அகர்கரும் சிறப்பாக பந்து வீசித் தடுத்து நிறுத்தினர். இவர்களின் சிறப்பானபந்துவீச்சினால் ஆரம்பத்தில் ரன் எடுக்கவே முடியாமல் தடுமாறியது இலங்கை.

சிறப்பாக பந்து வீசிய ஜாகிர்கான் 2 விக்கெட்டுகளையும், அகர்கர், சச்சின், கங்குலி, முனாப் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.இலங்கையின் இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்சர்தான் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக அளவிலான உதிரிகளைக் கொடுத்தது இலங்கைக்கு சாதகமாகி விட்டது. அதைக் கட்டுப்படுத்தியிருந்தால் நிச்சயம்220 ரன்களுக்குள் இலங்கையை சுருட்டியிருக்க முடியும்.

இத்தனைக்கும் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்கக்காரா ஆகிய பெரும் புள்ளிகள் நேற்று சரியாக ஆடவில்லை. அவர்களும் ஆடியிருந்தால்இந்தியாவின் நிலை படு மோசமாகியிருக்கும்.

உபுல் தரங்காதன் அதிகபட்சமாக 64 ரன்களை எடுத்தார். சமரசில்வா 59, தில்ஷன் திலகரத்னே 38 ரன்களும் சேர்த்தனர். இவர்கள் இருவரும்சேர்ந்துதான் இலங்கையை கெளவரமான ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர்.

மொத்தத்தில் இந்திய மட்டையாளர்கள், ஒட்டுமொத்தமாக சேர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை சம்மட்டி அடி அடித்துத் தகர்த்துவிட்டனர்.

சுருக்கமான ஸ்கோர்:

இலங்கை: 6 விக்கெட் இழப்புக்கு 254.

உபுல் தரங்கா - 64, சமர சில்வா -59, டி.தில்ஷன் - 38, அர்னால்டு -19, வாஸ் - 19.

ஜாகிர்கான்: 2-49, அகர்கர் 1-33, கங்குலி, சச்சின், முனாப் படேல் தலா 1.

இந்தியா: 185 ஆல் அவுட்.

டிராவிட் - 60, ஷேவாக் - 48, ஹர்பஜன் சிங் - 17 (நாட் அவுட்).

முரளிதரன்: 3-41, வாஸ் 2-39.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+