சூப்பர் 8க்கு எங்களுக்கு தகுதி இல்லை: டிராவிட்
போர்ட் ஆப் ஸ்பெயின்:சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற நாங்கள் சற்றும் பொருத்தமானவர்கள் அல்ல, ஒட்டு மொத்த அணியும் சிறப்பாக விளையாடவில்லை என்பதைஒத்துக் கொள்கிறேன் என்று இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கூறினார்.
இலங்கையுடனான முக்கியத் தோல்விக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் டிராவிட் பேசுகையில், நாங்கள் யாரும் சரியாகவிளையாடவில்லை. அடுத்த சுற்றுக்கு முன்னேற எங்களுக்குத் தகுதி இல்லை. இதை நான் கெளரவமாக ஒத்துக் கொள்கிறேன்.
தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். முடிந்த அளவுக்கு போராடினோம், ஆனால் அது போதுமானதாக இல்லை.
பெர்முடா வென்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு என்ற கோணத்தில் எல்லாம் நான் சிந்திக்கவில்லை. நாங்கள் சரியாக விளையாடவில்லை, சூப்பர் 8சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
உலகக் கோப்பைப் போட்டியில் நமது அணியின் பங்கு எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின்எதிர்பார்ப்புகளை நாங்கள் ஏமாற்றி விட்டோம்.
ஊருக்குத் திரும்பும்போது எங்களை ரசிகர்கள் தாக்குவார்கள் என்று நினைக்கவில்லை. ரசிகர்கள் நிச்சயம் கோபமாக இருப்பார்கள். ஆனால் இதுவிளையாட்டு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதை ஜீரணிக்க முடியவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்காக மிகப் பெரிய அளவில் நமது அணியினர்தயாராகி வந்தனர். கடுமையான பயிற்சிகளும் எடுத்திருந்தோம். ஆனால் முதல் சுற்றோடு கதை முடிவுக்கு வந்தது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
இர்பான் பதான் ஆடாதது ஏன்?
இர்பான் பதான் 3 போட்டிகளிலும் இடம் பெறாதது எனது முடிவு அல்ல. அணியில் யார் இடம்பெற வேண்டும், யார் இடம் பெறக் கூடாது என்பதைமுடிவு செய்ய தேர்வுக் குழு உள்ளது. அதி புத்திசாலிகள், அனுபவசாலிகள் நிறைந்த அந்தத் தேர்வுக்குழுதான் பதானை விளையாடஅனுமதிக்கவில்லை.
உலகக் கோப்பைக்கு முன்பு இர்பான் காயமடைந்தார். பின்னர் குணமாகி விளையாடும் தகுதியைப் பெற்றார். ஆனால் எந்தப் போட்டியிலும் அவர்இடம் பெறவில்லை. இன்றைய போட்டியிலாவது அவர் இடம்பெறுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை.
டாஸ் ஜெயித்தும், இலங்கையை பேட் செய்ய அழைத்ததில் தவறில்லை. பிட்ச் நிலைமை அதுபோலத்தான் இருந்தது. நாங்கள் நன்றாகவே பெளல்
செய்தோம். ஆனால் பேட்டிங்தான் சொதப்பி விட்டது.
254 ரன்களை சேஸ் செய்வது எளிதான ஒன்றுதான். முன்னணி வீரர்கள் சரியாக ஆடியிருந்தால் இந்தத் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.
இந்தியாவும், பாகிஸ்தானும் சிறப்பாக ஆடவில்லை. அதனால்தான் இரு அணிகளும் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளன.
தொடர்ந்து நான் கேப்டனாக இருப்பேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. பார்க்கலாம் என்றார் டிராவிட்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications