தொடர் போராட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்:சச்சின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
மும்பை:சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியிலிருந்து விலகும் வரை தொடர் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மும்பை கிரிக்கெட் ரசிகர்களும், பல்வேறுகிரிக்கெட் கிளப்களும் அறிவித்துள்ளதால் சச்சினின் வீடு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீடு உள்ள தெருவிலும் போலீஸார்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியா உலகக் கோப்பைப் போட்டியில் பரிதாபமாக தோல்வியுற்று வெளியேறியுள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தியகிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரும், வீரர்களின் பொறுப்பில்லாத ஆட்டம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்திய வீரர்களைக் கண்டித்து நாடு முழுவதும் ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து கிரிக்கெட் வீரர்களின் வீடுகளுக்கு போலீஸ்பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக அவரது சொந்த ஊரான மும்பையிலேயே கடும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. மும்பையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், பல்வேறு சிறு சிறு கிரிக்கெட் கிளப்களும், சச்சின் தங்களை ஏமாற்றி விட்டதாக,நாட்டைக் கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சச்சினின் வீடு உள்ள பந்தரா பகுதி கிரிக்கெட் கிளப் தலைவர் ஆசிப் கூறுகையில், டெண்டுல்கரை உடனடியாக அணியிலிருந்து நீக்கவேண்டும்.
நம்ம ஊர் என்பதால் அவரை பாசத்துடன் ஆதரித்து வந்தோம். ஆனால் அவர் எங்களை மட்டுமல்லாது நாட்டு மக்களையும் ஏமாற்றி விட்டார்.
பந்தரா மக்கள் அனைவரும் அவருக்காக வெட்கப்படுகிறோம். அவர் மும்பை திரும்பியதும் தினமும் அவர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் செய்வோம்.அவர் பந்தராவிற்குள் நுழையாமல் தடுப்போம்.
சச்சினை அணியில் இருந்து நீக்குமாறு கிரிக்கெட் போர்டு தலைவர் சரத் பவார் கடிதம் எழுதப் போகிறேன். அவர் அணியில் இருந்து வெளியேறும்வரை போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதேபோல சச்சின் அணியிலிருந்து வெளியேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக கிளப்களும், ரசிகர்களும் அறிவித்துள்ளதால்சச்சின் வீடு அருகே பரபரப்பு நிலவுகிறது.
அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவரது வீடு உள்ள தெருமுனையிலும் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில், செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இதற்கிடையே, சச்சின் வீடு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த (இது சரத் பவார் கட்சி) 25 பேர் கூடி போராட்டம் நடத்த முயன்றதால்பரபரப்பு ஏற்பட்டது. பந்த்ரா மாவட்ட தலைவர் ஆரில் பாவ்லா தலைமையில் திரண்டு வந்த தேசியவாதக் காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் தடுத்துதிருப்பி அனுப்பினர்.












Click it and Unblock the Notifications