புலிகள் விமானம்-எல்லோருக்கும் ஆபத்து-இலங்கை
கொழும்பு:விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது.
தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் ராஜபக்ஷே கூறுகையில், விடுதலைப் புலிகளின் புதிய பலம் இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் ஆபத்தல்ல. மாறாக, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் என பக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே இது பேராபத்துதான்.
ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளுக்கும் இப்போது பாதுகாப்பு மிரட்டல் எழுந்துள்ளது. இதை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
நாகை கடலோரத்தில் ரோந்து அதிகரிப்பு:
விடுதலைப் புலிகள் ஊடுறுவலைத் தடுக்கும் ேநாக்கில் நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பும், பதட்டமும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுறுவி விடாமல் தடுக்க இந்திய கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேதாராண்யம், கோடியக்கரை, தொண்டியக்காடு, செறுதலைக் காடு, ஆறுகாட்டுத்துறை ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கிராமங்களில் 24 மணி நேரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கிராமக் கண்காணிப்புக் குழுக்களையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணியன்தீவில் அமைக்கப்பட்டுள்ள கிராமக் கமிட்டியைத் தொடங்கி வைத்த டி.எஸ்.பி. கோவிந்தசாமி கூறுகையில், விடுதலைப் புலிகள் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக ஆயுதங்களைக் கடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே கிராமங்களில் அந்நியர்கள் நடமாட்டம் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக கியூ பிரிவு போலீஸாருக்ுகத் தெரிவிக்க வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் போன்றவற்றைக் கடத்துவது குறித்த தகவல் தெரிந்தாலும் போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார் கோவிந்தசாமி.












Click it and Unblock the Notifications