நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி:சென்னை பல்கலை.க்கு ரூ.100 கோடி!
டெல்லி: நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சி படிப்புக்காக, சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில்,
சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் 150ம் ஆண்டை கொண்டாடுகின்றன. இதையொட்டி இந்த பல்கலைக்கழகங்களில் நேனோ தொழில்நுட்பம், நேனோ அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும், தேவையான மையங்கள் நிறுவவும் ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும் இந்த ஆராய்ச்சி பணித்திட்டங்கள் 2010-11ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நேனோ தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் உருவாக்கப்படுவர்.
குவைத்துக்கு வேலை தேடிச் செல்லும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அந்நாட்டுடன் இருதரப்பு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இந்த ஒப்பந்தத்தின்படி கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும். இக்குழு வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும். மேலும் தொழிலாளர்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் காண்டிராக்ட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றம் செய்வதை தடுக்கும்.
குவைத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வராத தொழிலாளர்களின் நலன்களை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கும்.
நாட்டில் பொருளாதார குற்றங்களை தடுக்க, சந்தேகத்திடமான பண பரிமாற்றங்களை கண்காணிக்கவும், இது தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள சக அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் பொருளாதார புலானாய்வு பிரிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றார் முன்ஷி.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications