சென்னை-காவல்நிலையம் அருகே வாலிபர் படுகொலை
சென்னை:சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே திரைப்படத் துறையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். திரைப்படத் துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு தனது காரில் திரும்பினார்.
தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே காரை நிறுத்தி விட்டு அங்கேயே தூங்கினார். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. காரை சரமாரியாக அடித்து நொறுக்கிய அக்கும்பல், வெங்கடேஷையும் சரமாரியாக தாக்கியது.
அவர்களிடமிருந்து தப்ப காவல் நிலையத்தை நோக்கி ஓடினார் வெங்கடேஷ். ஆனால் அக்கும்பல் வெங்கடேஷை துரத்தி துரத்தி அடித்துக் கொன்று விட்டு தப்பி ஓடியது.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காவல் நிலையம் அருகிலேயே விரட்டி விரட்டி வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications