செல்போன் காதலனுடன் ஓடிய மாணவி மாயம்
அரக்கோணம்:செல்போன் மூலம் காதல் வளர்த்த மாணவி வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர் எங்கே போனார் என்று தெரியாமல் அவரது வீட்டினரும் போலீசாரும் திணறி வருகின்றனர்.
அரக்கோணத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரியின் மகள் வினீதா. இவர் காட்பாடியில் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் இவருக்கு ஒருவர் செல்போனில் மிஸ்ட் கால் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவருடன் பேசியதில் இருவருக்கும் இடையே நட்பு உண்டானது.
தனது பெயர் நிஜாமுதீன் என்றும் ராமநாதபுரத்தில் ஒரு வங்கியில் பணியாற்றுவதாகவும் கூறிய அந்த வாலிபர், வினீதாவுக்கு காதல் வலை விரிக்க அதில் விழுந்தார் வினீதா.
தொடர்ந்து போன் மூலம் பேசியும், நேரில் சந்தித்தும் காதல் வளர்த்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கடந்த 2ம் ேததி வீட்டிலிருந்த 30 பவுன் நகை, ரூ. 50,000 பணத்ைத எடுத்துக் கொண்டு ஓடிப் போனார் வினீதா.
இதையடுத்து போலீசில் புகார் செய்தார் வினீதாவின் தந்தை. போலீசார் பல இடங்களில் தேடியும் இருவரும் சிக்கவில்ைல.
ராமநாதபுரத்தில் நிஜாமுதீன் என்று யாரும் வங்கியில் பணியாற்றவில்லை என்றும் தெரியவந்தது.
இதனால் பணம், நகைக்காக மாணவியை ஏமாற்றி அந்த நபர் திருமணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் பகுதியில் வசதியான வீட்டு இளம் பெண்களைஇது போல செல்போன் மூலம் வலை விரித்துப் பிடித்து, பின்னர் அவர்களை குடும்பத்திடம் ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கறந்து வருகிறது ஒரு கும்பல் என்கிறார்கள்.
வெளியே தெரிந்தால் மானம் போகும் என்பதால் வீட்டினர் போலீஸ் உதவியை நாடாமல் பணம் கொடுத்து பெண்களை மீட்டு வருவதாகவும் தெரிகிறது.
வீனீதாவும் இது போன்ற கும்பலிடம் மாட்டியிருக்கிறாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications