வருமான வரி வழக்கு: விஜயசாந்திக்கு கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:வருமான வரித்துறை தொடர்ந்துள்ள வழக்கில், நடிகை விஜயசாந்திக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
2002-03ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்தது தொடர்பாக சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் விஜயசாந்திக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
![]() |
இன்று இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயசாந்தி ஆஜராகவில்லை. அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஜயசாந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் மே மாதம் 10ம் தேதி தள்ளி வைத்தார். அன்று விஜயசாந்தி நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications