போலி பாஸ்போர்ட்: இங்கிலாந்தில் 6 இந்தியர்கள் கைது
லண்டன்:போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் பிர்மிங்காம் நகரிலிருந்து கனடா தலைநகர் டோரண்டோவுக்கு செல்ல முயன்ற இந்தியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குஷ்தீப் சிங் (27), சபி சிங் (22), குர்ஷன்ஜித் சிங் (29), பால் சிங் (29), ஜகுரூப் சிங் மான் (26), ஜக்தர் சிங்(26). இவர்கள் 6 பேரும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு வந்தனர்.
அங்கிருந்து கனடா செல்ல காத்திருந்தனர். அப்போது அவர்களு பாஸ்போர்ட்டுகளை அதிகாரிகள் சோதித்தபோது அவை போலி பாஸ்போர்ட் எனத் தெரிய வந்தது. போலியான இங்கிலாந்து பாஸ்போர்ட் மூலம் ஆறு பேரும் டோரண்டோ செல்ல முயன்றனர்.
இதையடுத்து ஆறு பேரும் கைது செய்யப்பட்டு வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் கோல், 6 பேருக்கும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். சிறைத் தண்டனை முடிந்ததும் 6 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஜக்ரூப் சிங் மான், இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வரை வருவதற்கு இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியுள்ளார். இங்கிலாந்திருந்து கனடா செல்ல போலி இங்கிலாந்து பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தியுள்ளார்.
இதேபோலத்தான் மற்றவர்களும் செய்துள்ளனர். ஜக்தர் சிங் போலி பாஸ்போர்ட்டுக்காக 3000 பவுண்டுகளை செலவிட்டுள்ளார். கைதான ஆறு பேரும் கனடாவில் புது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்காக இவ்வாறு சென்றதாக கூறியுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications