லோகநாதன் உடல் தகனம் செய்யப்பட்டது
பிளாக்ஸ்பர்க்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் தென் கொரிய மாணவனின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக பேராசிரியர் லோகநாதனின் உடல் இன்று காலை இந்து முறைப்படி விர்ஜீனனியா டெக் பல்கலைக்கழகம் அருகே தகனம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவர் சோ சியூங் ஹூ நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பேராசிரியர் லோகநாதன், மாணவி மினால் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.
இதையடுத்து லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேர் அமெரிக்காவுக்கு விரைந்தனர். அவர்களின் பயணச் செலவுகளை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
வாஷிங்டன் சென்ற அவர்கள் தனி விமானம் மூலம் பிளாக்ஸ்பெர்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு லோகநாதனின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் இந்தியத் தூதர் சென் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் இந்து முறைப்படி லோகநாதனின் உடல் அருகில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications