பிரான்ஸ் தேர்தல்: புதுவையில் வாக்கெடுப்பு
புதுச்சேரி:பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக புதுவையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரெஞ்சு அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், வலது சாரி தலைவர் நிக்கோலஸ் சர்கோஸி மற்றும் சோசலிச தலைவர் செகோலன் ராயல் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுவையில் 5252 பேருக்கு பிரெஞ்சு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இதையடுத்து இவர்கள் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இவர்களில் 282 பேர் பிரான்ஸிலேயே வாக்களிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் மட்டும் இன்று புதுவையில் வாக்களித்து வருகின்றனர். தென்னிந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்ளிக்க வசதியாக பிரெஞ்சு துணைத் தூதரகம் 6 வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளது.
இவற்றில் புதுவையில் 4, காரைக்காலில் 2, சென்னையில் ஒரு சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
புதுவையில் உள்ள பிரெஞ்சு வாக்காளர்களைக் கவருவதற்காக சோசலிச கட்சியின் சார்பில் ஒரு பொதுக் கூட்டமும் நடந்தது. இருப்பினும் பிரெஞ்சு அரசியல் சூழ்நிலை தெரியாது என்பதால் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்துடன் பிரெஞ்சு வாக்காளர்கள் வாக்குச் சாவடிளில் வந்து தங்களது கடமையைப் பதிவு செய்து விட்டுச் சென்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications