சென்னை துறைமுகத்திற்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், சென்னை துறைமுகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகம் ஒன்றை லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் தாக்கி அழிக்கத் திட்டமிட்டுள்ளாகவும், இதற்காக கராச்சியில் பயிற்சி பெற்ற தற்கொலைப்படை ஒன்று ஊடுறுவியுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்துக்கு வெளியே போலீஸார் 25 மோட்டார் சைக்கிள்கள், ஜீப், சைக்கிள்களில் ரோந்துப் பணியை மேற்கொள்வர். 24 மணி நேரமும் இந்த பாதுகாப்பு மேற்கொள்ளப்படும்.
துறைமுகத்துக்கு உள்ளே மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் 50 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். துறைமுகத்தின் முக்கியப் பகுதிகளில் இவர்கள் ரோந்து செல்வர்.
துறைமுகத்தின் அனைவத்து வாயில்களிலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடலோரக் காவல் படை, மிதக்கும் காவல் படையும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications