சிறையில் ஸ்ரீதர் வாண்டையார் உண்ணாவிரதம்: கருணாநிதி கொடும்பாவி எரிப்பு-10 பேர் கைது:கருணாநிதி கொடும்பாவி எரிப்பு-10 பேர் கைது
திருச்சி:அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றததற்காகவும், வாகனத்தில் ஆயுதங்களுடன் சென்றதற்காகவும் கைது செய்யப்பட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
சீர்காழிக்கு வந்திருந்த அமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றபோது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 16 பேரை விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அறிந்ததும் வாண்டையார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற வாண்டையாரின் வாகனத்தை சோதனையிட்ட போலீஸார் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறி அவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் 28 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பார்வையாளர்களை சந்திக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதையடுத்து வாண்டையாரிடம் பேசி உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறை அதிகாரிகள் கோரி வருகின்றனர். அவரது உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாண்டையாரின் கைதை கண்டித்து இன்று சிதம்பரம் பஸ் நிலையத்தில் சாலை மறியல் பேராட்டம் நடத்திய அவரது கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சுமார் 450 பேர் கொண்ட அக் கும்பல் சாலையில் பாறைகளைப் போட்டு பஸ்களை தடுத்தது. இதையடுத்து அவர்களை போலீசார் ஓட ஓட விரட்டி அடித்தனர். 50 பேரையும் கைது செய்தனர்.
கருணாநிதி கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே மதுரையில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோரிப்பாளையத்தில் கருணாநிதியின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர். இது தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications