சரத்குமார் ரசிகர்கள் மீது பயங்கர தாக்குதல்
திருநெல்வேலி:விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்று கொண்டிருந்த நடிகர் சரத்குமார் ரசிகர்களை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருவதற்காக 50க்கும் மேற்பட்ட வேன்களில் சங்கரன்கோவில் வழியாக வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சங்கரன் கோவில் அருகே வந்தபோது ஒரு கும்பல் வழி மறித்து சில வாகனங்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியது.
அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் நடிகர் சரத்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தரப்பட்டது. தூத்துகுடி மாவட்ட கண்காணிப்பாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பை கவனித்து வரும் ஜான் நிக்கல்சனும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டனர்.
இதன் பேரில் சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, களப்பாகுளத்தை சேர்ந்த 25 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
அவர்களில் கோட்டூர் துரை(27), சுந்தரராஜன்(27), சந்தனபாண்டி(37), சந்தான பாண்டியன்(27) சந்தன பாண்டி(40), வேல்சாமி(49), மருதையா(60) ஆகிய 7 பேரை கொலை முயற்சி மற்றும் பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய வழக்குகளில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications