நுழைவுத் தேர்வு ரத்து: தடை வாங்குவதைதடுக்க சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு
டெல்லி:தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அஸ்வின்குமார் என்ற மாணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லும் என சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்தத் தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கணேசன் இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் விஸ்வநாதன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு யாரும் தடை வாங்கி விடாமல் தடுக்கும் நோக்கில் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தடை கோரி யாராவது மனு தாக்கல் செய்தால், தமிழ அரசின் கருத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
இந்த ஆண்டு முதலே நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதனால்தான் இந்த கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications