அம்பத்தூரில் அவசரமாக லேண்ட் ஆன ஹெலிகாப்டர்
சென்னை:இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக அம்பத்தூரில் தரையிறக்கப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் நேற்று காலை பயிற்சிக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. அதில் கமாண்டர்கள் விகாஸ், சஞ்சய் பரத், விமானிகள் லால், குமார் ஆகியோர் இருந்தனர்.
மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் அம்பத்தூருக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அங்குள்ள டன்லப் நிறுவனம் அருகே உள்ள காலி மைதானத்தில் ஹெலிகாப்டரை விமானிகள் தரை இறக்கினர்.
திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கூட்டம் கூடி விட்டது. போலீஸாருக்குத் தகவல் தெரிந்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.
பின்னர் கடலோரக் காவல் படையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டு பொறியாளர் குழு விரைந்து வந்து ஹெலிகாப்டரை பழுது பார்த்தனர். பின்னர் 3 மணியளவில் ஹெலிகாப்டர் பழுது சரி செய்யப்பட்டு பறந்து சென்றது.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications