பெரியாறு மதகுகளை மூடக் கோரி போராட்டம்
மதுரை:முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளை உடனடியாக மூடக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மே மாத இறுதியில், பருவ மழைத் தொடங்கும். இந்தக் காலத்திலாவது முல்லைப் பெரியாறு அணையின் மதகுகளை இறக்கி, தண்ணீரைத் தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையின்போது 142 அடி நீரைத் தேக்கி வைத்திருக்க நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அதைச் செய்ய தமிழக அரசு தவறி விட்டது.
இதனால் உச்சநீதிமன்றம் நமக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தும் கூட நாம் அதை பயன்படுத்தத் தவறி விட்டோம். எனவே இந்த ஆண்டாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி மே 9ம் தேதி மதுரை, பரமக்குடி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் இணைந்து பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் நெடுமாறன்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications