கருணாநிதிக்கு அரசு விழா-விஜயகாந்த் கண்டனம்
கடலூர்:சட்டசபையில் 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு அரசு சார்பில் பொன் விழா நடத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனது தொகுதியான விருத்தாச்சலத்திற்கு இன்று விஜயகாந்த் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரு கட்சியின் தலைவராக இருக்கிற கருணாநிதி, அந்தக் கட்சியின் சார்பில் சட்டசபையில் 50 ஆண்டுகளை உறுப்பினராக நிறைவு செய்துள்ளார். இதை அரசு சார்பில் விழாவாக எடுப்பது தவறானது, கண்டனத்துக்குரியது.
1949ம் ஆண்டு திமுக உருவாக்கப்பட்டபோது கருணாநிதி அதில் உறுப்பினராகக் கூட இல்லை. ஆனால் திமுக உருவானபோது கருணாநிதி அதில் உறுப்பினராக இருந்தார் என்று பெரியார் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆரம்பித்தபோது கருணாநிதி அக்கட்சியில் இல்லை என்பதை நான் நிரூபிக்கத் தயார். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. எனவே கருணாநிதி திமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அதில் இருந்தார் என்று பெரியார் படத்தில் கூறியிருப்பது அப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரின் தவறு.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழக மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட எம்.பிக்கள் பெரும் துரோகம் செய்துள்ளனர். தமிழக மக்களுக்காக அவர்கள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.
எனது தொகுதியான விருத்தாச்சலத்தில் 2006-07ம் ஆண்டில் 42 பணிகளுக்கு ரூ.1.20 கோடி நிதியை ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதில் 12 பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகள் ஏன் நிலுவையில் உள்ளன என்று அதிகாரிகளைக் கேட்டபோது அவர்களிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றார் விஜயகாந்த்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?











Click it and Unblock the Notifications