தயாநிதி மாறனை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு
சென்னை: தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் நிர்வாக குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று சென்னையில் திமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவது தீர்மானமாக, மத்திய அமைச்சரவையில் திமுக சார்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சரான தயாநிதி மாறனின் அணுகு முறைகளும், செயல்பாடுகளும் திமுகவின் கட்டுபாட்டை சீர்குலைக்கும் வண்ணம் இருந்து வருவதாலும்,
கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாலும அவரை மத்திய அமைச்சரவைலிருந்து விலக்கி கொள்ள தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கழக தலைவர் கலைஞர் கருணாநிதியும், பொதுசெயலாளர் அன்பழகனையும் கேட்டுகொள்வது என நிர்வாக குழு தீர்மானிக்கிறது.
இரண்டாவது தீர்மானம், தயாநிதி மாறனின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும் கழகத்தின் கட்டுபாட்டை குலைக்கும் வண்ணம் இருந்து வரும் காரணத்தால் கழகத்தில் அவர் வகிக்கும் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பு குறித்து அவரது விளக்கத்தை பெற்ற பின் மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என நிர்வாக குழு தீர்மானிக்கிறது என 2 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து உங்களை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று கேட்டு தயாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications